10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகசபை தனபாலசிங்கம்
ஓய்வுபெற்ற வரைவல்லுனர்
வயது 68
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை தனபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அகல் விளக்கே
எங்கள் குடும்பம் என்னும் கோட்டையில்
காவலனாய் வாழ்ந்த எம் அருமை தந்தையே
ஆண்டு பத்து பறந்தோடிய போதும்
எம் துயரம் எம்மைவிட்டு அகலவில்லை!
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும்
உலகில் துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்