
முல்லைத்தீவு உண்ணாப்புலவைப் பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சிறிஸ்கந்தராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் அசைவறியா அச்சாணியே!
புயல்கள் பல வந்தும் தடம் பிறழா ஆணிவேரே!
துயர்கள் பல கண்டும் துவண்டு விடா செஞ்சுரமே!
தசாப்தம் ஒன்று ஆனதப்பா உங்கள் உடல் மறைந்து...!
நட்புக்காய் உழைத்தவர் நீங்கள்!
உறவுக்காய் தேய்ந்தவர் நீங்கள்!
உழைப்பின் மறுவடிவம் நீங்கள்!
விருந்தோம்பலின் இருப்பிடம் நீங்கள்!
தசாப்தம் ஒன்று ஆனதப்பா உங்கள் பரிசம் உணர்ந்து...!
சிரமம் தெரியாமல் வளர்த்தீர்கள்!
துயரம் அணுகாமல் காத்தீர்கள்!
விருப்பறிந்து வாழ வைத்தீர்கள்!
உமையிழந்து தவிக்கவும் விட்டீர்கள்.
தடுமாறி நிலைகுலைந்து தனிந்து தவித்து நின்றாலும்...
உங்கள் முகம் கண்ணில் தெரிய
உங்கள் குரல் செவியில் ஒலிக்க
உங்கள் தடம் மனதில் பதிய
உங்கள் வாழ்வு பாடமாய் அமைய
தலை நிமிர்ந்து நிற்கின்றோம் உங்கள் பெயர் சொல்லி!!
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
மனைவி மற்றும் பிள்ளைகள்