யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் நாவற்கண்டியை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவஞானவதி அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகாமசுந்தரி, சிவகலை, சிவசோதி(இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்), சிவபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, சிவசிதம்பரம், சிவகௌரியம்மா, கற்பகவதி, சதாசிவம்(பண்டிதன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நித்தியானந்தன்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்), குமாரரட்ணம்(பபா கடை), இராஜேஸ்வரி, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நித்தியா(ஆசிரியை- யாழ் இந்துக்கல்லூரி), உமாகாந்தன்(ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), செந்தூரன்(கட்டார்), உமாசுதன், உமாசங்கர், உமாகாந்தன், பிரணவன், ரஞ்சனி, சாம்பவி, சங்கவி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
நிவேதிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.