Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1951
இறப்பு 21 JAN 2020
அமரர் கனகசபை அம்பிகைபாலன் 1951 - 2020 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அம்பிகைபாலன் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்சினி, பிரியதாரணி, மயூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹிஷாம், விதுரணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயகுமாரி, காலஞ்சென்ற சந்திரகுமாரி, ஜெயக்குமாரி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, புண்ணியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சந்திராவதி, கணேசமூர்த்தி மற்றும் ஈஸ்வரி, குருமூர்த்தி, திலகவதி, வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆத்திக் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-01-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை  கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்