Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAR 1937
இறப்பு 14 FEB 2019
அமரர் கனகசபாபதி சரஸ்வதி 1937 - 2019 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமகாவும் கொண்ட கனகசபாபதி சரஸ்வதி அவர்கள் 14-02-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபாபதி(ஓய்வுபெற்ற அரச ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாரதா(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசிட்டன்(பிரான்ஸ்), சித்திரா(கனடா), சுபத்திரா(பிரான்ஸ்), பரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விசாகபெருமாள்(கனடா), பாக்கியலெட்சுமி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஞானேஸ்வரி(வவுனியா), தவமணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரராஜா(ஜேர்மனி), கருணாகரமூர்த்தி(ஜேர்மனி), நளாயினி(பிரான்ஸ்), சோதிநாதன்(கனடா), உமாகாந்தன்(பிரான்ஸ்), கலையரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரதா(கனடா), தம்பிராசா(வவுனியா), கனகசபாபதி(கொழும்பு), தனபாலசிங்கம்(ஆசிரியர்- கனடா), கமலேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், மனோன்மணி, மகாதேவன், தனலெட்சுமி, சீதாலெட்சுமி(ஆசிரியை), துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்ஷன், சகானா, மயூரன், இலக்கியா, இந்துஷன், இந்துஷா, விதுஷா, அபிதா, ஆகாஷ், கபிலன், ஆரூஷன், ஆரணா, அபர்னா, அட்ஷா, அரிஷ், அதர்வன், ஜெலிசியா, சஜிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-02-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்