யாழ். சுன்னாகம் மேற்கு, பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 22-03-2025 சனிக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ந.ப 12.00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். பருத்திக்கலட்டி, சுன்னாகம்.