

யாழ். அல்வாய் கிழக்கு துலாவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்லம்மா அவர்கள் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான வண்ணார்பண்ணை ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(சிறாப்பர்) அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேந்திரன்(அப்பு- இலங்கை), காலஞ்சென்ற பத்மினி(ஆச்சி- கனடா), குகேந்திரன்(சின்னப்பு- சுவிஸ்), சாந்தினி(லண்டன்), சறோஜினி(நெதர்லாந்து), ஞானேந்திரன்(குட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், சின்னையா, ஞானாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலேஸ்வரி, இராஜலிங்கம், சீதாதேவி, சத்தியவடிவேல், கணேசலிங்கம், ஞானஜோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜீவன், புஜீவன், சஜீவன், றஜிந்தன், றினோதன், சுஜித்தா, அட்சயா, விஷ்ணுகா, ஆராதனா, சாஜினி, சதன், சஜித்தா, றினோதா, சுஜன், தமிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜக்ஷன், அட்ஷயன், சர்மிலி, அவந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மூத்தமகன் புவனேந்திரன்(அப்பு) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஈடில்லா அன்னையின் இழப்பால் அவதியுறும குடும்பத்தாருக்கு ஆறுதலளிப்பதோடு அன்னையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்