யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில் இல்லறம்
வாழ்ந்திருந்தோம்!
இன்று நாம் தனித்து தவிக்கின்றோம் இவ்வுலகில்
நீங்கள் இன்றி!
உங்கள் பாசத்திற்காய் ஏங்குகின்றோம்
அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை யுகங்கள் சென்றாலும்
உங்கள் நினைவு எம்மைவிட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான் அப்பா!!
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாய்
என்றும் இருப்பீர்கள் அப்பா!!
உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
எம்மை எல்லாம் ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற தந்தையாகிடுமா அப்பா
நாட்கள் 31 சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராதப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 16-05-2026 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.