
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் இராசம்மா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்திணேஸ்வரி, நகுலேஸ்வரி, புஸ்பராணி, ஸ்ரீஸ்கந்தராஜா(ஜெர்மனி), தெய்வீகராணி, சுகிர்தராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி, தங்கரத்தினம், காலஞ்சென்ற இரத்தினம்மா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரராஜா, பாலசிங்கம்(கிச்சி மாமா), புஷ்பராதா(ஜெர்மனி), செல்வநாதன், அமுதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாபு, ரமேஷ், விஜிதா, வனிதா, சுஜிதா, ஜனா, சுரேஷ், செல்வா, நிரோஷா, தர்ஷன், பிரகாஷ், கௌசி, சஞ்சீவன், லாவண்யா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.