Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 SEP 1947
இறப்பு 27 SEP 2019
அமரர் கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
(Mcsc, System Engineer Microsoft, Cisco Network Engineer) ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள உத்தியோகத்தர், MacDonald Douglas Aircraft Company- Project Riiyadh தொலைத்தொடர்பு மேலதிகாரி, பனிப்புலம் ஶ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய மூத்த ஆதீன கர்த்தா, கனடா பண்கலை பண்பாட்டு கழகத்தின் முன்னாள் போசகர், பணிப்புலம் டொட் கொம் இணையத்தின் நிறுவனர், இயக்குனர்
வயது 72
அமரர் கனகரத்தினம் கணபதிப்பிள்ளை 1947 - 2019 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

எமது அன்புத் தெய்வம், குடும்பக் கோபுரம் அமரர் கனகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு, மருத்துவமனைக்கும்,வீட்டிற்கும், உடன் ஓடி வந்தும், தொலைபேசி மூலமும்,குறுந்தகவல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமூம், வெளியூர், தூரதேசங்கள் என்று, உலகின் பல பாகங்களிலிருந்தும், ஓடோடி வந்து அனுதாபம் தெரிவித்து, எமக்கு ஆறுதலளித்ததோடு, அஞ்சலி நிகழ்வில், அவரது பூதவுடலிற்கு அகவணக்கம் செலுத்தியும், மலர் வளையங்கள்அனுப்பியும், பூமாலைகள் அணிவித்தும், இரங்கற் செய்திகள் வழங்கியும், அவர்தம் பெருமைகளை உரக்கச் சொல்லியும், ஆக்கங்கள் வடித்தும், தோத்திரங்கள் பாடியோர்க்கும், தொடர்ந்தும், அவரது இறுதிக் கிரியைகளிலும், ஊர்வலத்திலும், மலர்தூவி அவரை அணிவகுத்துச் சென்றும் எம்மோடு தோளோடு தோள் நின்ற நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், என அனைத்து அன்புள்ளங்களிற்கும்,எம் பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்தோடு, தாய் நாட்டிலும், கனடாவிலும், டென்மார்க்கிலும், தாமாக ஓடிவந்து, உணவளித்து வாகன வசதிகளையும், மேலும் பல உதவிகளையும் செய்து தந்துதவிய அனைத்து நல்லுங்களுக்கும் பெரும் நன்றிகள்!

மேலும், உளமார்ந்த உணர்வுடன், துயரச் செய்தியினையும் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்களையும், எட்டுத் திக்கும் ஒலிபெருக்கு மூலம் பறைசாற்றியும், நேரடி ஒளிபரப்பிற்கு வழியமைத்தும், தொடர்ந்து அந்தியேட்டி கிரியைகளுக்கும் முன்னின்று, அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்து, அத்துணை ஒத்துழைப்புகளையும் வாரி வழங்கிய பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நல்லுள்ளம் படைத்த இளைஞர் குழாம் அனைவருக்கும், சிரம் தாழ்த்திய நன்றிகள்!

31ஆம் நாள் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து சிறப்பித்தோர்க்கும், எம் தலையாய நன்றிகள். இம்மலரினை, குறுகிய கால அவகாசத்தில், அமைத்துத் தந்த ஃபைன் ப்ரிண்ட் நிருவனத்தினருக்கும்,எங்கள் இதயம் கனிந்த நன்ரிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thank you for the sympathy you have extended towards our family during the time of loss. With your support and God’s grace, we will prevail and cherish the life that late Mr. Kanagaratnam Kanapathypillai had endorsed and lived as an example.We are grateful for sharing your time by sending condolence messages, wreaths, calling us directly on the phone, visiting us from far corners of the world, giving glorifying speech on his life and the life he lived and participating in his last rites and prayers.Special Thanks to the Panippulam Ambal Sana Samooka Nilaiya Youth and Well wishers, for extending their support in announcing the funeral details across the region, facilitating the Live-broadcasting and thus, organizing and carrying forward the last rites and rituals at his birth home.We wish to express our sincere appreciation to Chapel Ridge Funeral Home, LankaSri, CTBC and FinePrint for their kind services.There are no means ot express our gratitude for your display of warmth and affection

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 25-10-2019 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணியளவில் ஸ்காபொரோ - கனட ஸ்ரீ கைலாஷ் இந்து மண்டபத்தில் நடைபெற்றுத் தொடர்ந்து அஸ்தி ஜலத்தில் சங்கமிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.


31ம் நாள் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் தான தர்மமும்

நேரம்:
ஆரம்பம் காலை 11:30 மணி 

நடைபெறும் இடங்கள்:
1) கனடா பெரிய சிவன் கோவில்விலாசம்:1148 Bellamy Rd N, Scarborough, ON M1H 1H2

2) அன்னாரின் இல்லம் - இலங்கைவிலாசம்:
பணிப்புலம், பண்டத்தரிப்பு(பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில்)

இங்ஙனம், மனைவி
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.