
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா மேரிசெல்வராணி அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான றிச்சார்ட் தர்மலிங்கம் ஹிரேஸ் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
றமேஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ், சுதாகரன்(லண்டன்), சுபேதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுமணன், விஜிதா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுதன்(முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்- தோணிக்கல் தரிப்பிடம்), சித்திரா(பிரான்ஸ்), விஜயா(லண்டன்), விஜயகுமாரி(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுயாந்(பிரான்ஸ்), ரஜாந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தனுஷன்(பிரான்ஸ்), லோயன்(லண்டன்), கிரியா(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), அகல்யன்(லண்டன்), நிருஜா(லண்டன்), சமரன்(பிரான்ஸ்), சோழன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கிறிஸ்டோ, மனோஜ்குமார், அகல்யா, நிலுபர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.