யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் ஒலுமடுவை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகராசா கனகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.