Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 SEP 1917
இறப்பு 25 JUL 2013
அமரர் கனகம்மா பூபாலசிங்கம்
வயது 95
அமரர் கனகம்மா பூபாலசிங்கம் 1917 - 2013 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா பூபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மாவுன் மடியில் வாழ்ந்த
அந்நாட்கள் போல வருமா
இம்மா உலகம் ஆளும்
இன்பமும் இன்பம் தருமா
சும்மாவா சொன்னார் தாய்மடி
சொர்க்கம் என்று?ஐயோ
அம்மா நீ போன போதே
ஆசையும் போச்சே போச்சு!

மறதியால் எதையும் மறப்போம்
மறந்தும் நாம் உன்னை மறவோம்
பிறவி நீ எடுத்தாற் கூடப்
பிள்ளையாய் பிறக்கக் கேட்போம்
உறவிலும் உன்பேர் காத்து
உள்ளநாள் வரையில் வாழ்வோம்
அறம்பொருள் இன்பம் வீடு
அம்மாவின் நினைவில் காப்போம்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

We had a wonderful grandmother
One who never really grew old
Her smile was made of sunshine
And her heart was solid gold
Her eyes were bright as shining stars
And in her cheeks fair roses you see.

We had a wonderful grandmother,
And that’s the way it will always be.
But take heed, because
She’s still keeping an eye on all of us,
So let’s make sure
She will like what she sees.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices