மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூர் கச்சேரி மூத்த விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா குமாரசாமி அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இராமநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்திரா- ரத்தினம்(யாழ்ப்பாணம்), யசோதா- ராஜன்(கனடா), இராகவன் -ரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லாவணியா, யாழினி, ரிசானி, பிறிஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our Heartfelt condolences to her family may her soul rest in peace