
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா கதிரவேலு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க
கற்றுக்கொடுத்தாய்!
பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும்
அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே இவ்வுலகில்
ஆண்டுகள் பத்து கடந்திடினும்
உன் நினைவது எமை விட்டு
அகலாமல்
என்றும் உனது
நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். I.Myuresan Mrs.I.Pathmini