யாழ்.வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சுந்தரம்பிள்ளை அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம் - கணக்கர்) அவர்களின் அன்பு மனையாளும்,
சந்திரகுமார், ரவிகுமார், சிவகுமார், பாலகுமார், அருணோதயகுமார், அருள்ஜோதி, அருந்ததி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
வளர்மதி, தயாளினி, ஜெயப்பிரியா, றஜனி, இதயகுமரன், ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமுதாம்பிகை, யோகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அருமைநாயகம், மற்றும் யோகேஸ்வரி, பரமேஸ்வரி, சாந்தலிங்கம்(தம்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, சரசமலர் ஆகியோரின் அன்புச் சகலியும்,
நிமிஷா, ஆதவி, நிலாவன், ஜெனுஜா, அருஷிகா, அகீபன், பிரியந், சிவானிகா, சர்மிகா, சாயினி, சஜிவ், திவ்யன், அருஜன், சகான், சஜன், ரிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.