
யாழ் கோண்டாவிலை பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா சிட்னியை (பென்டில் ஹில்) வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகமணி சிவலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை
அன்னனயை மிஞ்சிய தெய்வமும் இல்லை!
அன்பெனும் சொல்லின் அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினம் ஊட்டி உணர்வவைப் பருக்கினாய்
உடலுள் வைந்து உயினரக் காத்து
உலகில்
என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி சென்றாய் அம்மா!
எம்முயிர் நிலைக்கும் வரை உம் நினைவு
நெஞ்சில் நிலைத்திருக்கும் அம்மா!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட
உங்கள் உதிரம் எம் உடலில்
உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள்
உயிராக வாழ்வீர்கள்
எம்முடன்
நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால் மீண்டும்
நாம்
உங்கள் கருவறையில்
புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில்
நாம் தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும்
உங்களுக்கு
எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
Missed you still.