யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் தவக்குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/03/2024.
என் அருமைக் கணவரே..!
என்னையும் என் பிள்ளையையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ..!
வானடைந்து ஐந்து ஆண்டுகள் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம்
என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்..!
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கனவாகிப் போனது
என் இனிய வாழ்க்கை..!
நினைவாக வாழுகிறீர்
நெஞ்சக் கோயிலிலே!
மங்காத புகழுடன்
விண்ணகம்
சென்றுவிட்ட
எமது அருமை தந்தையே..!
உங்கள் பிரிவு ஐந்து
ஆண்டுகள் கடந்தோடினாலும்
கணங்கள் பல சென்றாலும்
யுகங்கள் பல கடந்தாலும்
உங்கள் கண்ணியமும்
உங்கள் பொன் முகமும்
என்றென்றும் இந்த
தரணியில்
நிலைத்திருக்கும்..!
இருளில் ஒளி தரும்
சூரியன் போல்
தனிமையில் நம்மைக்
காக்கும்
காவலன் போல்
துன்பம் வரும்போது
கண்ணை
இமை காப்பது போல்
காற்றினால் எங்கள் சுவாசத்தில்
கலந்து
எம்முடன் என்றுமே வாழ்கிறாய் அப்பா..!
RIP