
யாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் நல்லநாதன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அப்பாக்குட்டி அவர்களின் பூட்டனும்,
மனோகரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிரமணன், தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யாழினி, விஜிதாஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மனோரஞ்சிதம், சிவகுமார், சந்திரகுமார்( ராஜன்), சந்திரவதனி(வதனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்தி, அனகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரிஷிகேசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாரங்கன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சங்கீத், சஹானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.