யாழ்ப்பாணம் கைதடிநுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்ற சின்னையா சண்முகலிங்கம்(ஓய்வுநிலை உப அதிபர் - மட்டுவில் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கனகசபை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா, அபர்ணா, சதீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரகுமார், காலஞ்சென்ற லசீதரன், துஸ்யந்தினி(பிரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோதையழகி, கல்கிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நயனிகா, அபூர்வா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
LIve link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 May 2026 10:00 AM - 12:30 PM