

யாழ். வண்ணார்பண்ணை கிழக்கு சீனியர் லேன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ கமலதேவி கைலாசபதி அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வண்ணார்பண்ணை கிழக்கு, கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கைலாசபதி(பதியண்ணை, சண்முகா ஜுவல்லரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலமயூரன், பிரதீபா, கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குருதாரணி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லிகிதன், அதிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ஸ்ரீ லங்கா தேவி, ஸ்ரீ இந்திரா தேவி, ஸ்ரீ சுசிலாதேவி, விவேகானந்தன், சகுந்தலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
கலைமகள், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நாமகள் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சீனியர் லேன், கலட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.