யாழ். அரியாலை கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தர்மலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய் இறுதிக் காலம் வரை வாழ்ந்து மீளாத்துயில் கொண்ட கமலாம்பிகை தர்மலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலம் அனுதாபச் செய்திகளை தெரிவித்தவர்களுக்கும், இறுதிக் கிரியைகளின் போது வருகை தந்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும், மேலும் அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்காக நடைபெற உறுதுணையாய் நின்று உதவி புரிந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.