Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1960
இறப்பு 28 JUL 2019
அமரர் கமலாம்பிகை அருட்சோதி
வயது 58
அமரர் கமலாம்பிகை அருட்சோதி 1960 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை அருட்சோதி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருட்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, பரஞ்சோதி(ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரோர்ஸ்), நாகேஸ்வரி, சிவராசா(சிவா ரேடிங் கம்பனி, S.T.C- கொழும்பு, யாழ்ப்பாணம்), சிவபாலன்(லண்டன்), சிவகுமார்(சுவிஸ்), சிவஞானதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

அருட்குமார்(லண்டன்), அஜந்தா(லண்டன்), அஜந்(இலங்கை), கிஜிதன்(பிரான்ஸ்), கஜாந்தினி(NDB Bank- திருநெல்வேலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 பர்மிலா(லணடன்), தவானந்தன்(லண்டன்), ஜெயமாலினி(இலங்கை), பிரகாஷ்(Union Bank- யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமியாரும்,

ஹபிஷா, கிஷாந், டதுக்‌ஷன், ஹரினிஸ், சங்கீத், ரிஷிகா, மதுரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices