Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 SEP 1942
இறப்பு 02 APR 2020
அமரர் கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா)
வயது 77
அமரர் கமலாதேவி குலவீரசிங்கம் 1942 - 2020 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி குலவீரசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னார் சுகவீனமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அன்னாரின் நண்பர்கள் day centre ( Milaap centre ,Norbiton centre , Colliers wood centre) மருத்துவ ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களிக்கும் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களிற்க்கும் எமது நன்றிகள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எமக்கு உணவு தந்து உதவிய நண்பர்களுக்கும், எமது இதயம் கனிந்த நன்றிகள்.தொலைபேசி மூலம், அனுதாப அட்டைகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். கண்ணீர் அஞ்சலி, மலர்வளையம் அனுப்பி அஞ்சலி செய்தோருக்கும் அத்துடன் முதியோர் வலுவூட்டு திட்ட ( Norbiton day centre) அங்கத்தவர்களுக்கும் அன்னாரின் துயரச் செய்தி கேட்டு அதே தினம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய video call மூலம் சிவபுராணம் பாடி அஞ்சலி செலுத்திய அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .இந்த நாட்டின் அசாதரண சூழ்நிலையைப் பொருட்படுத்தாது அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-05-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 29 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.