10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கல்பனா சண்முகரட்ணம்
1983 -
2014
சுன்னாகம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கல்பனா சண்முகரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோ எம்முடன் நீ இல்லை
ஆண்டுகளோ பறந்தோடி விரைந்து மறைகிறது
நாளேடு நீ மறைந்து பத்தாண்டு என்கிறது
ஐயகோ நம்பவே முடியுதில்லை
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் பிரிவால்
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் உன் நினைவுகளுடன் நாளை கடத்துகின்றோம்