
மேன்கமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிவெட்டியை வசிப்பிடமாகவும், திருகோணமலை கிருஷ்ணபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட காளிக்குட்டி செல்வராசா அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காளிக்குட்டி பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரக்குட்டி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கயிலாயப்பிள்ளை, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்), பாஸ்கரன்(முன்னாள் கூட்டுறவு சங்க முகாமையாளர்), தேவகி(ஜேர்மனி), சுதாகரன்(லண்டன்), சுஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிறிதரன், தர்மபாலன், ராகவதாஸ்(ஜேர்மனி), செல்வராணி(லண்டன்), வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராசா, மாணிக்கவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரக்ஷிகா(ஜேர்மனி), பிரதிஸ்(ஜேர்மனி), ரிஷால்(லண்டன்), சாகரி(லண்டன்), துசாகரன், திலக்ஷனா, கபிஷேக்(A/L பழைய மாணவன் உவர்மலை விவேகானந்தா கல்லூரி), பவிக்ஷன்(ஸ்ரீ/ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி), கபில்ராஜ்(ஊவாவெல்லச பல்கலைக்கழகம், பதுளை), மதிராஜ், தனுஸ்ராஜ் ஆகியோரின் பாட்டனும்,
லியாம்(ஜேர்மனி), ஜெய்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 35/49 கிருஸ்ணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.