யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கலாறஞ்சன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதலிங்கம் மற்றும் லோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லிங்கேஷ்வரி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரபி, ரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லெயன், கியான், செயா ஆகியோரின் பாசமிகு அம்மாத்தாத்தாவும்,
கலாவதி, கலாமோகன், கலாரூபன், கருணாகரன், காலஞ்சென்ற கலாநாதன் மற்றும் கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபா, வசந்தி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.