யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாயர் இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/03/2023.
ஆண்டு ஒன்று ஆனதுவே
எமையழவிட்டு
ஆறிடுமோ எம்
துயரம் எமை விட்டு
மாண்டவர்
மீண்டதில்லை இது மானிட
நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை
எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
கண்கள் கலங்குகிறதே காற்று வீச
மறுக்கிறதே
உம் மறைவுதனை
எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து
விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை-
இன்று
பாரை விட்டு போனதேனோ!
கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும்
நிலைத்து
வண்ண மலர்
வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்.