Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 SEP 1935
இறப்பு 31 MAY 2015
அமரர் கைலாயபிள்ளை திருநாவுக்கரசு
வயது 79
அமரர் கைலாயபிள்ளை திருநாவுக்கரசு 1935 - 2015 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 3ம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-05-2025

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து பத்து ஆண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

தகவல்: திருஞானசம்பந்தர்(சிறி)

தொடர்புகளுக்கு

திருஞானசம்பந்தர்(சிறி) - மகன்