மட்டக்களப்பு பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், பழுகாமம், திருகோணமலை திரியாய், கொழும்பு, மட்டக்களப்பு நாவற்குடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிபதி அரசரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அமைதியான புன்சிரித்த முகமும்
அயராத உழைப்பும்
உறவுகளை
ஆதரிக்கும் உள்ளமும்
வளமான வாழ்வுக்கு
அன்பால் கிடைத்த வரமே
அவனியை விட்டு நீங்கி- இன்றோடு
நாட்கள் 31 ஆனதோ
ஆறவில்லை
எம்துயர் குறையேதுமின்றி காத்த-
எமது
குடும்ப ஆலவிருட்சத்தின்- ஆயுள்
காலத்தை குறைத்தானோ
ஆண்டவன்!
கண்ணீரில் எம்மை கரையவிட்டு
காலனவன் தன் கணக்கை முடிக்க
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
விண்ணுலகம் விரைந்துவிட்டீர்களோ
நெஞ்சில் நீங்கா நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.