15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காஞ்சனாதேவி ரகுலேஸ்வரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் வாடித்துடிக்கும்
குடும்பத்தினர்!
தகவல்:
குடும்பத்தினர்