திதி:06/03/2026
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம்
எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
நீங்கள் மறைந்து ஆண்டுகள்
ஒன்று ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!