Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யூலியன் ஜெயசீலன் மத்தியூஸ்
இறப்பு - 01 MAR 2008
அமரர் யூலியன் ஜெயசீலன் மத்தியூஸ் 2008 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட யூலியன் ஜெயசீலன் மத்தியூஸ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பின் உருவமானவரே
எம் தந்தையே
கதிரவனாய் எங்கள் வாழ்வில்
 பிரகாசமாய் ஒளி வீசினீர்கள்
என்றும் எம் இதயத்தில்
அழியா உருவம் கொண்டு- எங்கள்
அன்பு தெய்வமாய் வலம் வந்தீர்கள் பப்பா!

வாழ்ந்த நாட்களை வசந்தகளாக்கி
விட்டு சென்ற எம் அன்புத்தந்தையே
 உதிர்ந்தது உங்கள் உயிர் மட்டுமல்ல
உடைந்தது எங்களின் இதயங்களும்தான்!

மண்ணுலக வாழ்வை விட்டு
விண்ணுலக வாழ்வை வாழ்ந்திட மிக விரைவாக
சென்றீர்கள் ஆனாலும்
உங்களுக்கு இத்தனை அவசரமா?
இறைவன் அழைப்புக்கு இணைந்து
இசைந்து சென்றுவிட்டீர்களா?

ஆண்டுகள் நீளலாம் பப்பா- ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
ஆண்டுகள் நீளலாம் பப்பா- ஆனால்
உங்கள் திருமுகம் எம்மைவிட்டு என்றுமே மறையாது
உங்கள் நினைவுகள் என்றும்- எம்
உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
 எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...

என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices