யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும, சுண்டிக்குழி கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட யோசப்பின் சௌந்தரி யேசுதாசன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு கந்தையா அமிர்தநாதர் ஆன்பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை சாமிநாதர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வின்சன் யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மொறின்(றூபா- கனடா), பிராங்(லண்டன்), நிரஞ்சன்(கனடா), டொறின்(மீரா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லோறன்சியா கமலம், றீற்ரா(கனடா), காலஞ்சென்ற அன்ரன் குணசேகரம், அரியமலர்(கனடா), அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வமோகன், ஆன், செல்வராணி, இராசசூரியர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வரப்பிரகாசம், சந்திரா குணசேகரம், இராமநாதன் சீவரத்தினம், காலஞ்சென்ற சாமிநாதர் லிகோரி, செலஸ்ரீன் சாமிநாதர்(சின்னக்கா) ஆகியோரின் மைத்துனியும்,
யூடி, மரியோ, விவியன், நத்தானியல், துவாரகா, டீப்திகா, ரைரோன், றமோன், யோவானா, கரீம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ். தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தூய மரியன்னை கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace Aunty.