

யாழ்ப்பாணம் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் கைமன் பாலசிங்கம் அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசேப், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
வள்ளியம்மை(கதிர்) அவர்களின் அன்புக் கணவரும்,
டெஸ்மன்(கொழும்பு), சர்மினி பெற்றினா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், பூமணி(கனடா), காலஞ்சென்ற வீரசிங்கம், ஜெயமணி(பிரான்ஸ்), அஞ்சலா(கனடா), ராசசிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ரெட்ணசிங்கம், றுக்குமணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லீலா(யாழ்ப்பாணம்), பீற்ரர் போல்(கனடா), காலஞ்சென்றவர்களான ராணி(கனடா), துரைசிங்கம், மற்றும் நவரட்ணம்(கனடா), லூர்த்தம்மா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சீலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பாண்டியன்தாழ்வில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.