

யாழ். வடமராட்சி சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் கெனடி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஜோன்பிள்ளை மேரி றீற்றா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,
லொசிங்ரன், மேரி ஜோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதா, றொபின்சன், றீகன், மில்ரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எட்வீசம்மா, பிரான்சிஸ்கா(நோர்வே), இசபெலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருளானந்தம், திருச்செல்வம், அருள்தாஸ்(நோர்வே), பாக்கியநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராசாத்தி, கிளி, புஸ்பம்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான டேவிட், ராசன் மற்றும் பீற்றர், நோபேட்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
குலம் , ஜென்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூடிற்றா, யூஜினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றக்சியா, செபோன், டெனியெலா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.