அமரர் ஜெயசீலன் அவர்கள் நல்ல நாற்று மேடையில் வளர்ந்த பயிராக, பகட்டு அல்லாத அதிர்ந்து பேசாத பண்பு, மொழிஆழுமையின் துணையோடு அடுத்தவர்க்குதவும் மனப்பாங்கு .. 1979 ன் கடைக்கூறுகளில் இருந்து -அவருடன் பழகக் கிடைத்த நாட்கள் மனதை விட்டகலாதவை ... அன்றைய நாட்கள் அகதி அந்தஸ்துகோரிக்கையாளர்களுக்கு, அனுசரணையாக - ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலோசனைகள், சமூக சேவைகள்- உள்ளூர் குடிவரவு அலுவலகம் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லுதல், மற்றும் நமது தாய் நாட்டின் ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிரான ஒவ்வொரு ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் மற்றும் உண்ணா நோன்புகள் போன்ற நிகழ்வுகளில் அவரது பங்குகள் அளப்பரியது…. அகதி அந்தஸ்துக் கோருபவர்களுக்கான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுப்பது ….. உதவுவது போன்ற போர்வையில் தந்திரமான வியாபாரம் நடந்த காலம் ஒன்று உண்டு, அவற்றைத் தாண்டியும் சமரசம் இல்லமல் மனிதாபிமான பேருதவிதான் சீலனிடம் இருந்து எல்லோருக்கும் கிடைத்தது…. சீலனின் பண்புகள் அவர்தம் வசந்த காலங்களில் நண்பர்கள் மத்தியில் அவரை நடுநாயகமாக வைத்திருந்தது, எனினும் அவரது லெளகீக வாழ்வியல் அவரை மடைமாற்றியது எனலாம்…. எஞ்சிய அவர்தம் பேரானந்தப் பெருவாழ்வு தில்லைக் கூத்தனின் திருவடியில் மகிழ அவர்தம் சுற்றத்துடன் கூடி வேண்டுகிறேன். ஓம் சாந்தி...