யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலன் ஜானா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை
அன்போடு வளர்த்தவளே
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம்
தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய் பாசத்தின்
பிறப்பிடமாய் அன்பிற்கு இலக்கணமாய் இருந்த
எம் குலவிளக்கே
பத்து மாதம் பாடுபட்டு
பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய்
எமைப்
பெற்றெடுத்தவளே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும்
அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பெறாமகளின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். திரு திருமதி கனகசுந்தரம் குடும்பம்.