Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUL 1964
இறப்பு 16 SEP 2023
அமரர் ஜெயரூபி புஷ்பநாதன்
வயது 59
அமரர் ஜெயரூபி புஷ்பநாதன் 1964 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயரூபி புஷ்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-09-2024

ஆண்டொன்று போனபின்பும்
அழுதவிழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவுனை
அனுதினமும் நினைக்கின்றோம்

நீயிருந்த காலமெல்லாம்
நிம்மதியாயிருந்தோமே
ஏனம்மா எமைப்பிரிந்தாய்
ஏதிலிகளாய் ஏங்குகின்றோம்

பார்புகழ நாம் வாழ
பாதைகளை வகுத்தவளே
காலமெல்லாம் நாம் வாழ
கனவுகளைச் சுமந்தவளே

இயலாது என்ற போதும்
அயராது உழைத்தவளே
வேரறுந்த விழுதுகள் நாம்
விம்முவது கேட்கிறதா

தூரநோக்கு சிந்தனையால்
துளிர்விட்டு வளர்த்தவளே
துணிவோடு முடிவெடுத்து
தூணாக நின்றவளே-இன்று
துணையின்றித்தவிக்கின்றோம்..

யார் கண்தான் பட்டதுவோ
காலனவன் கவர்ந்து கொண்டான்
உன் கனவெல்லாம் நனவாக்கி
நின் காலடியில் சமர்ப்பிப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: கணவர், பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 16 Sep, 2023
நன்றி நவிலல் Sat, 14 Oct, 2023