31ம் நாள் நினைவஞ்சலி
மலர்வு 18 OCT 1964
உதிர்வு 22 AUG 2021
அமரர் ஜெயராணி சிவமோகன் 1964 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராணி சிவமோகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

கற்றுத்தந்தவள் நீ!!
பற்று வைத்தவளும் நீ!!
இனிய தருணங்களை
எமதாக்கியவளும் நீ!!
இற்றுவிடா இனிய வாழ்வை
எமக்களித்த.....
அதில் நீ அற்றுப்போனதேன்...
அம்மா!!!

உதித்த நாளில் உதிர்ந்த
எம் கோயிலே....
குடியிருந்த நாம் தவிக்கிறோம்...
குதூகலிக்க நீயின்றி.....
நெஞ்சில் வலிமையுடன்
நீங்காத நினைவுகளுடனும்....!!

உங்களின் ஆத்மா இறைவனின் கரங்களில்
சாந்தியடைய வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்......!!. 

தகவல்: குடும்பத்தினர்