வவுனியா நெடுங்கேணி கோரைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges, Gien ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜா வினாசித்தம்பி அவர்கள் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பக் குலகமன்
சிவ பாதலோகம் ஏகி
முப்பத்து ஒரு நாட்கள் கடந்ததுவோ?
தந்தையே உங்கள்
அரவணைப்பின்றி நித்தமும்
நாம் வாடுகின்றோம்
அத்து,
மீண்டும் எம்மிடையே வந்து
முன்புறுவல் பூக்க மாட்டாயா?
நானிலத்தில் நாம் வாழும் காலம்வரை
கலையாது உங்கள் நினைவு!
எம் உயிர்த்துடிப்பில்- உங்கள்
வாசம் சுமந்து வாழ்கின்றோம்
நித்தியமும் எங்களுடன் வாழ்ந்து வழிகாட்டுங்கள் அப்பா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுகிரியைகள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று, பின்னர் அந்தியெட்டிக் கிரியைகள் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற்று அதனைத் தொடர்ந்து ந .ப 12:00 மணியளவில் 3 Rue des Loriots 45500 Gien எனும் இடத்தில் நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துக்கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய பிரர்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.