
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தி சுரேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப்
பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால்
நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில்
உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
முதலாம் ஆண்டு வீட்டுக் கிருத்திய கிரியைகள் எதிர்வரும் 05.07.2025 சனிக்கிழமை திருகோணமலை எண் 38 வன்னியார் வீதியில் அமைந்திருக்கும் அன்னாரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் இல 17 கல்லூரி வீதியில் அமைந்துள்ள JUBLEE HALL இல் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்வில் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774119354
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.