யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயமணி நிர்மலகுமாரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நல்ல போராட்டத்தைப் போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,
நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே
அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல
அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
பூக்களின் மத்தியிலே மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
கமல வாசனை வீசும் பூக்களின்
மத்தியில் இன்பமாய் அயர்ந்துடுவேன்.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே அம்மா! .
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!!!