5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயமணி நிர்மலகுமாரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அம்மா!
அனைவருக்குமாய் நான் உங்களை ஆராதிக்கிறேன்
சூரியனின் ஒளி நாள் பொழுதைப் பிரகாசமாக்கும்
நட்சத்திரங்களின் நயனங்கள்
இரவு நேரத்து இருளை வெளிச்சமாக்கும்
உங்கள் ஜீவ ஒளி எங்கள் குடும்பத்தை
இரவும் பகலும் வெளிச்சமாக்குகிறது
உங்கள் உருவ உலாவல்
எங்களுக்குக் கிடைக்கவில்லை
ஆனாலும், அம்மா எங்கள் இதயங்களின் அலைகளில்
உங்கள் ஒளி உமிழ் குமிழ்களாக மிதக்கின்றன
இந்த இருப்பை எங்களிடமிருந்
துயாரும் பிரிக்க முடியாது
மறைக்கவும் முடியாது
இருப்பினும் இன்றுவரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்துகொண்டேயிருக்கின்றன
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்