Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1929
இறப்பு 11 FEB 2019
அமரர் ஜெயலட்சுமி செல்வரட்ணம்
வயது 89
அமரர் ஜெயலட்சுமி செல்வரட்ணம் 1929 - 2019 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுண்டுக்குழி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி செல்வரட்ணம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(தபால் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற பிறேமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மபாலன், குணபாலசூரியர் மற்றும் இராசலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராசா(கனடா), காலஞ்சென்ற இராமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஷ்வரி(அவுஸ்திரேலியா), கமலாதேவி(கனடா), காலஞ்சென்ற சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி- அசோகன்(கனடா), பிரதீபா(கனடா), யுகேந்திரன்- விதுஷ்கரணி, தனுசன், தனுகரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பிரணவி, பிருந்தவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்