யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி நடேசன் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசன், ஜெகதாம்பாள் தம்பகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நல்லம்மா, காசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
நடேசன் காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி, சயந்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்புச்செல்வன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிறீநிதி அவர்களின் அன்புப் பேத்தியும்,
ஜெயராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன்(பிரித்தானியா), ஜெகநாதன் மற்றும் ஜெயசுந்தரி(கனடா), ஜெயபாலன்(பிரித்தானியா), ஜெயராணி(ஜேர்மனி), ஜெகீஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் திருவுடல் 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 3:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதன் பின்னர் பி.ப 4:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.