1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயபாலன் நடராஜா
(மாத்தன்)
வயது 59
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயபாலன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06.05.2023
ஓராண்டு கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். ஆத்மா சாந்தியடைய ஆராதனைகள். பாலேஸ் கு. குகபாலன்