

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியந்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் சின்னராஜா அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ் சின்னராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கொன்ஸ்ரன்ரைன், றெபேக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யோசப்பின் யோகதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
டான்சி, டயஸ் பற்றிக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரியமலர்(கிளி), மேரி ஸ்ரெலா(றூபி- கனடா), அமலதாசன்(தனம்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்தானநாயகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டானியல் ஜெயநாயகம், பிலோமினா- றஞ்சிதம்(புத்தளம்), காலஞ்சென்ற தவநாயகம், தேவநாயகம்(புத்தளம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிம்சோன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சேளினா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-01-2021 புதன்கிழமை அன்று புனித கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.