
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாஸ் மேரி அன்ரனியா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வெலிச்சோர் யேசுதாஸ்(மணி) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வன், வின்சன், பிறேமன், றூபன்(பிரான்ஸ்), ஜீவன்(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்), சறா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லேகா, காலஞ்சென்ற றொமினா மற்றும் றஞ்சினி, கவிதா, யேந்தி(பிரான்ஸ்), A.P போசன்(பிரான்ஸ்), அமலதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுயித் சிந்து, மதுசன், காலஞ்சென்றவர்களான திவ்வியா, அனோயன் மற்றும் மதுஷா, நிலா, அகல்விழி, அலஸ்வின், அகஸ்வின், றுசானி, அஜிதா, றுக்கிளி, கதிர்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுஜித்தா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மலர் மற்றும் மரியநாயகம், செல்லக்கிளி மற்றும் மரியநாயகம், யோன் அல்பிறட், காலஞ்சென்ற செல்லக்கிளி மற்றும் ராணி, றஞ்சினி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மங்களம், பரிமளம், நேசம்மா, தங்கா, லூயிஸ் மற்றும் ஆனந்தம்மா, மோசேஸ், ஞானேஸ்வரி, தேவன், இருதயநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைத்தியாம்பிள்ளை, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் புலோமிநாதர், காலஞ்சென்றவர்களான பாலையா, திரோசம்மா(தங்கமணி) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வல்வெட்டித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There is nothing that is invincible for a soul as spirited as you…yet you bowed down to death to honor God and his will. Rest in peace