
வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுரெட்ணம் சாமிநாதன் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமிநாதன் கொன்ஸ்ரன்ஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரியங்கா, சர்மிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியநாயகி(ஆசிரியர்), மரியகிறிரிஸ்னா, மேரிஸ்ரெலா(கனடா), யேசுதாசன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலக்குமார்(பிரதம கணக்காளர் வவுனியா), காலஞ்சென்ற சண்முகராசா, ஏபிரகாம்(AP- கனடா), அருள்வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன்(வவி- கனடா), தவேந்திரன்(வவா), வனஜா, புவீந்திரன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரா, பேபி, ஜெயராஜ், சிந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப
07:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பி.ப
03:00 மணியளவில் நேரியகுளம் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.